முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

சைவ சமயம் அடிப்படை விளக்க படங்கள் தொகுப்பு

சைவ சமயம் அடிப்படை விளக்க படங்கள் தொகுப்பு

சைவ சமயத்தின் அடிப்படை கொள்கை - இறைவன் ஒருவனே


இறைவன் ஒருவனே



சைவ சமயத்தின் தொன்மை

சைவ சமயம் அநாதியானது. முப்பொருள் உண்மை தத்துவத்தை உடையது.

சைவ சமயத்தின் தொன்மையை குமரிக்கண்டம் பறைசாற்றும். தமிழ் சைவம் ஆகிய இரண்டும் நம் கண்கள்.



குமரிக் கண்டம் - ஒவ்வொரு தமிழரும், உலகத்தின் அனைவரும் அறிய வேண்டிய உண்மை.

சைவ சமயம் காலத்திற்கு முந்தையது. சிவ வழிபாடு காலத்திற்கு முந்தையது. தமிழ்ச் சங்கங்கள் இதற்கு சான்று.

சிவ வழிபாடும் இறைவன் தத்துவமும் எக்காலமும் இருந்தது. நமக்கு இன்று கிடைத்துள்ள நூல்களின் காலம். சைவ சமய நூல்களும் காலமும்.



சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை - இதற்கு என்ன அர்த்தம் ? ஏன் ?



சைவ சமயத்தை ஏற்காதவர் என்றும் உண்டு. இறைவன் அதிசூக்குமமானவர். அவரை உணர அவரது அருள் வேண்டும். இறைவனே அருளிய சைவ சமயம் என்றும் வாழும். சிவனடியார்கள் எக்காலமும் வாழ்வர்.


இறைவன் ஒருவனே என்பது சைவ சமயத்தின் அடிப்படை கொள்கை. அந்த ஒருவன் யார் ? அவனே சிவபெருமான். சிவபெருமான் அழிக்கும் கடவுளா ? இல்லை. உருத்திரன் வேறு, சிவபெருமான் வேறு.


ஏக இறைவன் சிவபெருமானின் தன்மைகள் என்ன ?



இறைவன் உருவம் உள்ளவனா ? உருவம் அற்றவனா ? அவன் எந்த வடிவமாகவும் வர இயலுபவன்.
சிவபெருமானுடைய ஐந்து 5 தொழில்கள் என்ன ?

சிவபெருமானுடைய எட்டு 8 குணங்கள் யாவை ? எண் குணத்தான்.


நானே சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்றும் நானே கடவுள் என்றும் எத்தனையோ பேர் இவ்வுலகில் கூறினர். ஆனால், இன்று அதில் ஒருவர் கூட இல்லை. இறைவன் காலத்தையும் இடத்தையும் கடந்து வென்றவர். உண்மையான இறைவனை அடையாளம் கண்டு வணங்குங்கள். செத்துப் போகும் உயிர்களை கடவுள் என்று எண்ணி ஏமாறாதீர்கள்.


சைவ சமய சின்னங்கள் 3. திருநீறு, உருத்திராட்சம், பஞ்சாக்கர மந்திரம்.


உருத்திராட்சம், ருத்ராக்ஷம் யார் அணியலாம் ? உருத்திராக்கம் யார் வேண்டுமானாலும் அணியலாமா ?


பெரும் உலகப் புகழுடைய நம் சமயத்தை சமய விரோத ஆளுனர்கள் நம் பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கியதால் நம் சமயத்தின் பெருமைகளை உணராத அறிவிலிகளாய் அலைகிறோம். அந்த அறியாமை மடைமையை களைந்து சமயக் கல்வி கற்போம். நம் குழந்தைகளுக்கு சமயக் கல்வி அவசியம் கொடுப்போம்.

சைவ சமயத்தின் பைபிள் யாது என்று வெளிநாட்டவர் ஒருவர் என்னிடம் வினவினார். இறைவனின் பெருமைகளையும் தோத்திரங்களையும் வெறும் ஒரு சிறு புத்தகத்தில் அடக்கிவிட முடியுமா ? நம்மிடம் ஒரு பல்கலைக் கழகமே உள்ளது.


இறைவனை அறிந்து அவனை அடைய நமக்கு உதவும் கருவி எது ? சைவ சமய குரு யார் ?


சைவ சமயத்தின் தலையாய நூல்கள் எவை ?


சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகள் எவை ?



சைவ சமய குரு யார் ? சமய குரவர் நால்வர் யாவர் ?

சைவ சமய சாத்திர நூல்கள் எத்தனை ? அவை எவை ?


சைவ சமயத்தின் நுட்பங்களை உணர வைக்க வந்தது திருக்கயிலாய பரம்பரை. அது என்ன ?


சைவ சமயம் புறச் சந்தான குரவர்கள் யார் ?


சைவ சமயம் அகச் சந்தான குரவர்கள் யார் ?
சைவ சமயம் திருமுறை சார்ந்த நூல்கள் எவை ?


சைவ சமயம் புராண நூல்கள் எவை ?
பிற சைவ சமய நூல்கள் அருளிய அருளாளர்கள் யார் ?

சைவ சமயத்தின் உண்மையான குருமார்கள் யாவர் ? சாய் பாபா போன்றவர்களைத் தவிருங்கள்.

பன்னிரு திருமுறைகள் அற்புதங்கள் செய்பவை. அவை நிறைய அற்புதங்களை முந்தைய காலங்களிலும் செய்தவை. திருமுறை படிக்க ஆரம்பித்த பின்னர் உங்கள் வாழ்கை சந்தோசமான பாதையில் திரும்புவது உறுதி.
திருமுறை அறிவோம். வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்.
திருமுறைகளின் சிறப்பு யாது ? சிவபெருமானே திருமுறைகளை நமக்கு அருளிச் செய்துள்ளார்.


சைவ பெற்றோர்கள் செய்ய வேண்டியது யாது ?

சைவர்கள் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது யாது ?


சைவ வணிகர்கள் செய்ய வேண்டியது யாது ?


சைவத்தின் மேல் சமயம் வேறு இல்லை. திருச்சிற்றம்பலம்.


நம் திருமுறைகள் யாவும் நம் பாட்டன் சொத்து. தாராளமாய் யாவரும் பயன்படுத்துங்கள். சிவாயநம.

திருச்சிற்றம்பலம்.

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

புதிய விளக்கப் படங்கள் - சைவ சமயம்

சமீபத்திய சைவ சமய விளக்கப் படங்கள்.

சைவ சமயத்தில் உள்ள நான்கு படிநிலைகள் எவை ? இறைவனை அணுகுவதற்கு உள்ள வழிகள் யாவை ?

1. சரியை - நம் உடலால் திருத்தொண்டு புரிதல்
2. கிரியை - நம் உடலாலும் உள்ளத்தாலும் பூசித்து தொண்டு புரிதல்
3. யோகம் - நம் அகத்தால் பூசித்தல்
4. ஞானம் - முப்பொருள் உண்மையை அறிவிக்கும் நூல்களை கற்றல், கேட்டல், கற்பித்தல்



இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு யாது ?

1. சத்புத்ர மார்க்கம்
2. தாச மார்க்கம்
3. சக மார்க்கம்
4. சன் மார்க்கம்



சைவ சமயத்தின் அடிப்படைத் தத்துவமான முப்பொருள் உண்மை யாது ?

பதி, பசு, பாசம் இம்மூன்றும் அநாதி.



திருவைந்தெழுத்தின் பொருள் என்ன ?


 முக்தி அடைந்த பின் என்ன செய்வோம் ? சிவலோகம் சென்று நாம் செய்யும் 4 தொண்டுகள் எவை ?


சிற்றின்பம் வேண்டுமா ? நீங்காத, தெவிட்டாத, தீராத பேரின்பம் வேண்டுமா ?


பசுவாகிய நாம் செய்ய வேண்டியது யாது ? பாசத்தை நீக்கி பதியை அடைவதே.

திருஞானசம்பந்தர் பெருமான் நிகழ்த்திய அற்புதங்களில் மிகச் சில...


இளையான்குடி மாற நாயனார்




திருநாவுக்கரசர் பெருமான் செய்த அற்புதங்களில் வெகு சில...



மீதமுள்ள வாழ் நாளில் என்ன செய்யப் போகிறீர்கள் ?



மெய்ப்பொருள் நாயனார்



 நாயன்மார்களும் சிவதொண்டும்

திருக்குறிப்புத் தொண்டர்
அதிபத்த நாயனார்
அப்பூதி அடிகளார்


 நாயன்மார்களும் சிவதொண்டும்

பூசலார் நாயனார்
முருக நாயனார்
கண்ணப்ப நாயனார்


 பிரதோஷ வழிபாடு - குறிப்பு


 சுந்தரமூர்த்தி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் சில...


இந்த மனித பிறவி எதற்கு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது ? நம் உடல் நமக்கு ஏன் கொடுக்கப்பட்டுள்ளது ?

திருஅங்கமாலை - திருநாவுக்கரசர் தேவாரம்.


 இன்று நாம் செய்யக்கூடிய சிவதொண்டுகள் யாவை ?


சிவ வழிபாடு திருமுறை ஓதும் மரபு யாது ?


இந்துக்களுக்கு, சைவ சமயிகளுக்கு அன்பார்ந்த வேண்டுகோள்....


திருச்சிற்றம்பலம்.

உலகின் தெருக்கள் எங்கும் சைவ பாடசாலைகள் அமைப்போம்.
பள்ளிக்கரணை சிவனடியார் திருக்கூட்டம்.