முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 26 ஜூலை, 2016

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பயிற்சி கோப்பு பகுதி 1

குறிக்கோள்: 


சைவ சமயம் பற்றிய அடிப்படை தத்துவங்கள், கொள்கைகள், உண்மைகள் ஆகியவற்றை உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும். 


அதற்கு மேல் நிலைகளாக அவர்கள் தங்களை பன்னிரு திருமுறைகளை ஆழ்ந்து படித்தும், சைவ சித்தாந்தம் கற்றும், நம் கோவில்களை பராமரித்தும், சிவ தொண்டுகள் செய்தும் உய்வடையட்டும். ஆனால், உலகில் 99.9% மக்கள் இறைவன் அருளிய சமயத்தை அறியாமல் அல்லல் பட்டு மடிகின்றனர். அவர்களுக்கு நம் சைவ சமய அடிப்படை செய்திகளை கொண்டு சேர்ப்பதே நம் தலையாய கடமை. இதற்காக நாம் அனைவரும் அரும் பாடுபடுவோம். அதில் ஒரு சிறு நுண்ணிய துளியே இந்த முதல் காணொளி. இந்த காணொளியை நன்றாக உள் வாங்கி, நீங்கள் யாருக்கெல்லாம் போட்டு காட்ட முடியுமோ, உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், எதிர் வீடு, பக்கத்து வீட்டு நண்பர்கள் என ஒருவர் விடாமல் அனைவருக்கும் எடுத்துச் சென்று இதற்குரிய விளக்கமும் கொடுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எம்பெருமான் அருள் என்றும் உண்டு. திருச்சிற்றம்பலம்.

சைவ சமயம் அடிப்படை நுட்பம் பயிற்சி கோப்பு பகுதி 1




உலகில் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பயிற்சி காணொளி.


சைவ சமய அடிப்படைகளை மிகச் சிறிய வடிவில் ஜெராக்ஸ் செய்து, புத்தகம் போல நடுவே மடித்து பின் பண்ணி எல்லோருக்கும் கொடுக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு தமிழருக்கும் கொண்டு செல்ல உதவுங்கள். நீங்களே ஜெராக்ஸ் செய்து கணினி வாடையே இல்லாதவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

https://drive.google.com/open?id=0B5oSXjiZfL5aZm9DRkw1Wml1cVU

ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.


சைவ சமயத்தின் அடிப்படை செய்திகள்

சைவ சமயத்தின் அடிப்படை செய்திகளை உலகில் யாவருக்கும் கொண்டு செல்வதே எமது குறிக்கோள்.

Fundamentals of Shaivism in Video - Tamil

சைவ சமயத்தின் தொன்மை

நவீன விஞ்ஞானம் சொல்கிறது உலகின் வயது 454 கோடி ஆண்டுகள் என்று. உலகம் தொடங்கிய நாளிலிருந்து மனிதன் கற்றுக் கொண்ட பாடங்கள் எங்கே போயின ?

நம் இறைவன் யார் ?  அவர் எங்கே இருக்கிறார் ? எப்படி இருக்கிறார் ? இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் ? அவர் தன்மைகள் எவை ?


சைவ சமயத்தின் புனித நூல் எது ?  நமது குருமார்கள் யாவர்?


சைவ சமய சின்னங்கள், சாதனங்கள் எவை ?


சைவ சமயம், திருமுறைகளின் சிறப்பு யாது ?


சிவசிவ அரகர. சிவசிவ அரகர.