குறிக்கோள்:
சைவ சமயம் பற்றிய அடிப்படை தத்துவங்கள், கொள்கைகள், உண்மைகள் ஆகியவற்றை உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
அதற்கு மேல் நிலைகளாக அவர்கள் தங்களை பன்னிரு திருமுறைகளை ஆழ்ந்து படித்தும், சைவ சித்தாந்தம் கற்றும், நம் கோவில்களை பராமரித்தும், சிவ தொண்டுகள் செய்தும் உய்வடையட்டும். ஆனால், உலகில் 99.9% மக்கள் இறைவன் அருளிய சமயத்தை அறியாமல் அல்லல் பட்டு மடிகின்றனர். அவர்களுக்கு நம் சைவ சமய அடிப்படை செய்திகளை கொண்டு சேர்ப்பதே நம் தலையாய கடமை. இதற்காக நாம் அனைவரும் அரும் பாடுபடுவோம். அதில் ஒரு சிறு நுண்ணிய துளியே இந்த முதல் காணொளி. இந்த காணொளியை நன்றாக உள் வாங்கி, நீங்கள் யாருக்கெல்லாம் போட்டு காட்ட முடியுமோ, உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், எதிர் வீடு, பக்கத்து வீட்டு நண்பர்கள் என ஒருவர் விடாமல் அனைவருக்கும் எடுத்துச் சென்று இதற்குரிய விளக்கமும் கொடுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் எம்பெருமான் அருள் என்றும் உண்டு. திருச்சிற்றம்பலம்.
சைவ சமயம் அடிப்படை நுட்பம் பயிற்சி கோப்பு பகுதி 1
உலகில் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பயிற்சி காணொளி.
சைவ சமய அடிப்படைகளை மிகச் சிறிய வடிவில் ஜெராக்ஸ் செய்து, புத்தகம் போல நடுவே மடித்து பின் பண்ணி எல்லோருக்கும் கொடுக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு தமிழருக்கும் கொண்டு செல்ல உதவுங்கள். நீங்களே ஜெராக்ஸ் செய்து கணினி வாடையே இல்லாதவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
https://drive.google.com/open?id=0B5oSXjiZfL5aZm9DRkw1Wml1cVU
ஓம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக