முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

திங்கள், 14 டிசம்பர், 2015

whatsapp வாட்ஸேப் வாட்ஸேப்பில் பதிவு செய்யப்பட்ட குறுஞ் செய்திகள்

திருச்சிற்றம்பலம்.
கோவில் சுவருக்கோ, கோவிலுக்கோ தீங்கு விளைவித்தால் ?
கோவில் சுவருக்கோ, கோவிலுக்கோ தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் கடுமையாக கண்டிக்கிறார் திருமூலர்.  என்னதான் ஒரு மனிதன் தானே பெரும்பொருள் செலவு செய்து கட்டிய கோயிலாக இருந்தாலும் சரி, அவன் அந்தக் கோயிலில் இருந்து ஒரு சின்னஞ் சிறிய செங்கல்லைக்கூட தன் உபயோகத்திற்காக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால், அவன் கதையை முடித்து விடுவான் ஆண்டவன். (மென்மையாகப் பார்த்தோம் நாம். ஆனால், திருமூலர் தன் பாடலில் கடுமையாகச் சொல்கிறார்.) அந்த மனிதன் அவ்வாறு கோயில் சொத்தைத் தன் உபயோகத்திற்காக எடுத்தபோது, அதைத் தடுக்காத அரசனுக்கு (ஆட்சியாளருக்கும்) பெரும் தீங்கு வரும். தவறான அந்தச் செயலைச் செய்பவர், யாராக இருந்தாலும் சரி, அவர் கதையை ஆண்டவன் முடித்து விடுவான்.

‘அதெல்லாம் என்னிடம் நடக்காது. நான் முனிவன். நான் வேதியன். ஆகையால் கோயில் சொத்தை, என் குடும்பச் செலவிற்காக எடுத்தால் கடவுள் என்னைத் தண்டிக்க மாட்டான்’ என்று யாராவது சொன்னால், அது எடுபடாது. கோயில் சொத்தினைச் சூறையாடுபவர்களின் வாழ்வை, ஆண்டவன் சூறையாடி விடுவான். யாராக இருந்தாலும் விட்டு வைக்க மாட்டான். இவையெல்லாம் நம் கருத்து அல்ல! திருமூலர் சொல்கிறார்.

கட்டுவித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக்கும்; அபிடேகத்து அரசரை
முட்டுவிக்கும்; முனிவேதியர் ஆயினும்
வெட்டுவித்தே விடும் விண்ணவன் ஆணையே!

பொழிப்புரை:

திருக்கோயிலில் மதிலைக்கட்டுவித்தவரே பின்பு பொருளாசை முதலிய காரணங்களால் அதினின்றும் ஒரு கல்லை எடுப்பினும், சாதாக்கிய தத்துவத்தில் இருந்துகொண்டு ஆகமங்களை அருளிச்செய்த சதாசிவ மூர்த்தியின் ஆணை அவரை அழிக்கும். அக் குற்றம் நிகழாவாறு காவாமைபற்றி, அப்பொழுது முடிசூடி ஆள்கின்ற அந்நாட்டு அரசரையும் அவ்வாணை இடருறச் செய்யும். அக் குற்றத்தைச் செய்தவர், `முனிவர்` என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற அந்தணராயினும், அவ்வாணை அவரைக் கொலையுண்டு மடியவே செய்யும்.

சைவ நன்னெறி தான் தழைத்தோங்குக.
தெய்வ வெண்திருநீறு சிறக்கவே.

திருச்சிற்றம்பலம்.

------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக