முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பெரியபுராண சொற்பொழிவு

திருச்சிற்றம்பலம்.

நாம் அனைவரும் கண்டிப்பாக கேட்க வேண்டிய பெரிய புராண சொற்பொழிவு.

சொற்பொழிவு பேச்சாளர் சிவதிரு ஆர் பி வி எஸ் மணியன் ஜி அவர்கள்.

RBVS Manian Periyapuranam

மொத்த சொற்பொழிவுகளையும் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் 4:30 மணி நேரம் ஓடக்கூடிய 60 MB கோப்பாக உள்ளது.

பேரூந்து மற்றும் சிற்றூந்தில் பயணம் செய்யும் போது, ஓய்வாக இருக்கும் போது, எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கும் போது என்று சில மணி நேரங்கள் கிடைத்தால் இதை கேட்டுக்கொண்டே இருங்கள்.

பகுதி 1 பெரியபுராணம்
பகுதி 2 பெரியபுராணம்
பகுதி 3 பெரியபுராணம்
பகுதி 4 பெரியபுராணம்

பகுதி 4 பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாறு வருவதால், அந்த கோப்பின் 60 MB ஐ,  5 பகுதிகளாக தலா 13 MB ஆக பிரித்தும் போட்டுள்ளேன். பகுதி 4 பெரியபுராணம் பதிவிறக்கம் செய்தவர்கள், திருஞானசம்பந்தர் பகுதியை பதிவிறக்கம் செய்ய வேண்டியதில்லை.

கோப்புகள் பதிவிறக்கம் செய்ய

https://drive.google.com/folderview?id=0B5oSXjiZfL5aNFJBU0ZDal9NNFE&usp=drive_web


திருச்சிற்றம்பலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக