வாட்ஸப்பில் வாட்சேப்பில் பதிய பகிர கூடிய சிவ செய்திகள் - 3
Shiva Saiva Siva news sharable in whatsapp 3
--------------------------------------------------------------------------
உலகில்
பல சமயங்கள் தோன்றி அழிந்துள்ளன. அவற்றில் உண்மைகள் இல்லாமையே அதற்கு மூல
காரணம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல, மதமாற்றம்
செய்பவன் அதே மதமாற்றத்தால் அழிந்துள்ளான். புற சமய நடவடிக்கைகளைப்
பார்த்து கோபப்படும் முன்னர், நம் சமயத்தை நாம் எவ்வளவு அறிந்துள்ளோம்
என்பதை நாம் ஆராய வேண்டும். முதலில் நம் சமயத்தை ஆழமாக அறிந்து கொண்டு,
அதன் தத்துவங்களை உணர வேண்டும். புற சமய சிந்தனையை விட மிக முக்கியம், நம்
சமயத்தை ஆழமாக உணர்வது. ஆகையால், நம் சமயத்தை உணர்ந்து அதை பரவுவதில்
நேரத்தை செலவிடல் வேண்டும். சரி, நம் தலைப்புக்கு வருவோம்.
1.
ஆனந்தமாக நெற்றி முழுவதும் திருநீறு இடுங்கள். வேலை செய்யும் இடத்திலும்
சரி, மக்கள் கூடும் இடங்களிலும் சரி, வீட்டிலும் சரி, விழாக்களிலும் சரி.
எங்கும் நீறணியுங்கள்.
2. உருத்திராட்சம் அணிந்திடுங்கள். பிறரை அணிய ஊக்குவியுங்கள்.
3. தினமும் காலையில் உங்கள் வீட்டில் விளக்கேற்றி, திருமுறை பாடல் ஓதி, சிவபெருமானை எழுந்தருளச் செய்யுங்கள்.
4. தினமும் திருக்கோவில் சென்று அப்பனை தரிசனம் செய்யுங்கள்.
5. தினமும் ஓரிருவரிடமாவது சைவ சமய விடயங்களை பேசுங்கள். சிவபெருமானின் புகழ் பேசுங்கள்.
6.
சைவ நிகழ்வுகள் பற்றிய தகவல்களை அறிந்து அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து
கொள்ளுங்கள். (வீட்டில் வெட்டியாக இருக்கும் நேரம் அனைத்தும், தொலைக்காட்சி
பார்க்கும் நேரமும், இதற்கு மாற்றப்படலாம்.)
7. ஆங்கில
வார்த்தைகள் பேசுவதை தவிர்த்து பிழையில்லாத தமிழில் பேசுங்கள், எழுதுங்கள்.
தமிழில் கையெழுத்து போடுங்கள். பொது இடங்களில் தமிழில் எழுதுங்கள்.
8. சைவ நூல்களை படியுங்கள். சொற்பொழிவுகள் கேளுங்கள். ஒவ்வொரு மாதமும் நம் சைவ ஞானம் வளர்ந்து கொண்டே போக வேண்டும்.
9. அனைத்து சிவ பூசைகளும், குரு பூசைகளும், குடமுழுக்குகளும், பண்டிகைகளும், திருவிழாக்களும் ஒன்று விடாமல் கலந்து கொள்ளுங்கள்.
10.
சிவ தலங்கள் யாத்திரை செய்து கொண்டே இருங்கள். தேவார பாடல் பெற்ற தலங்கள்
276 உம், சிவமலை கோவில்களும், திருவாசக தலங்களும், வைப்புத் தலங்களும்
சென்று தரிசனம் செய்யுங்கள்.
11. உங்கள் வீட்டில் உங்கள்
வசதிக்கேற்ப, சிவபூசை நடத்துங்கள். திருவாச முற்றோதல்கள், திருமுறை
விண்ணப்பம், கூட்டு வழிபாடு, மாகேசுவர பூசை போன்று தொடர்ந்து நடத்துங்கள்.
12. உழவாரப்பணி செய்யுங்கள். உங்களால் முடிந்த ஒரு சிவதொண்டை இடைவிடாது செய்து வாருங்கள்.
இந்த
12 உம் செய்து வந்தால், இப்பிறவியில் மிகுந்த பேரின்பமும், சிவபெருமான்
தரிசனமும், திருவடிப்பேறும் உங்களுக்கு கிட்டுவது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்.
திருச்சிற்றம்பலம்.
சைவர்கள் செய்ய வேண்டியது யாது ?
------------------------------------------------------------------------
நாத்திகர்கள் யார் ?
கடவுள் இல்லை என்று சொல்பவன் மட்டும் நாத்திகன் அல்ல. வேத நெறியை ஏற்காத யாவரும் நாத்திகர்களே. இன்றைய உலகில், கடவுள் இல்லை என்று சொல்பவன், புத்தர்கள், முகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள் என்று யாவரும் நாத்திகர்களே. அன்று சமணர்கள் என்னவெல்லாம் சூழ்ச்சி செய்தார்களோ, அதே போன்றும், அதை விடவும் கொடிய பொய்களை பரப்பவும் தயங்காதவர்கள். இன்று பல பொய்களை பரப்பியும் வருகிறார்கள். இனியும் இவர்கள் புதுப்புது பொய்களையும் உருவாக்குவார்கள். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது திருக்குறள். அறிவு உள்ளவர்கள், யார் எதைக் கூறினாலும் அப்படியே நம்பி விடமாட்டார்கள். மாறாக, அதில் என்ன உண்மை இருக்கிறது என்று ஆராய்ந்து மெய்ப் பொருளைக் காண்பவர்கள். இந்த அடிப்படை பகுத்து அறியும் அறிவு நம்மிடம் இல்லாமையால் தான் பல்வேறு விளம்பரங்களைப் பார்த்து ஏமாறுபவர்களும், மதம் மாறுபவர்களும் இன்று இருக்கிறார்கள். இந்த அடிப்படை பகுத்தறிவு இருந்தமையால் தான் இந்தியாவில் கடந்த சில நூற்றாண்டுகளில் பல்வேறு தலைவர்கள் மதம்மாறவில்லை. அநாதியான சனாதன தர்மத்தை உணர்ந்து போற்றி வந்துள்ளனர். ஆனால், நாத்திகர்கள் வெளிநாட்டவர் தூண்டுதலாலும், தம் சொந்த பகுத்தறிவு இன்மையாலும், தங்களுக்கு தெரிந்த பொய்களை பரப்புவர். ஆனால், நாம் என்றும் அடிப்படை பகுத்தறிவை விடாமல் தெளிவாக இருந்து ஞான மார்க்க வழியில் செல்ல வேண்டும்.
------------------------------------------------------------------------
திருச்சிற்றம்பலம்.
மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.
சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.
மனிதர்களுக்கு ரொம்ப முக்கியானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்க மாகும். உணவையும் உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது மிகவும் நல்லது. அவ்வாறு இருக்க இயலாதவர்களுக்கு (வயது முதிர்ந்தோர், வியாதியஸ்தர்கள் ஆகியோர்)
விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பால், பழங்கள் மட்டுமே சாப்பிட்டு விரதமிருக்கலாம் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கை உப்பில்லாமல் வேக வைத்து உண்ணலாம் அல்லது சத்துமாவை வெல்லத்துடன் கலந்து ஒரே ஒருவேளை மட்டும் உண்ணலாம்.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் அன்றைய இரவை சிவாலயத்தில் கழிப்பது சாலச் சிறந்தது. சிவாலயங்களில் நடைபெறும் மூன்று கால பூசையிலும் பங்கேற்று சிவபெருமானை தரிசிக்கவேண்டும்.
சிவராத்திரிக்கு முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று
இரவு (ஞாயிறு இரவு) முழுவதும் சிவனை நினைத்து மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும். மறு நாள் திங்கள் (அதாவது அன்று இரவு தான் சிவராத்திரி) அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்து சூரிய உதயத்துக்கு முன்பாக சிவசிந்தனையோட சிவாலயத்திற்கு போய் இறைவனை வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் சாப்பிடக்கூடாது.
இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். அவசியம் நாலுகால பூஜையையும்,
பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி கால பூஜையையாவது பார்ப்பது அவசியம்.
சுருங்கக் கூறின் மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதற்கு முந்தைய தினமான திரயோதசி அன்று ஒரு பொழுது மட்டும் உணவருந்தி, மறுநாள் சதுர்த்தசி அன்று உபவாசம் இருந்து தூக்கம் களைந்து இரவு நான்கு ஜாமங்களிலும் சிவபெருமானை பூஜித்து வழிபட்டு அதற்கு அடுத்த நாள் காலை ஏழைகளுக்கும் தகுதியுடையோருக்கும் அன்னதானம் செய்யவேண்டும்.
சிவராத்திரி அன்னைக்கு விரதம் இருந்தா போதாதா ? அது எதுக்கு முந்தின நாளும் இருக்கணும் ?
அப்படி கேளுங்க…..
வேளா வேளைக்கு நேரம் தவறாம உண்டு உறங்கும் நம்மால், திடீரென்று மகாசிவராத்திரி அன்னைக்கு கண் விழித்து உபவாசம் இருந்து பக்தி செலுத்துவது சிரமமாக இருக்குமல்லவா? எனவே நம் உடலையும் மனதையும் அதற்கு தயார் செய்வதன் பொருட்டே பெரியோர்கள் முந்தைய நாள் திரயோதசி அன்றும் விரதம் இருக்க சொல்லியிருக்கிறார்கள். திரயோதசி அன்று விரதம் இருக்கும்போது நம் மனமும் உடலும் ஓரளவு அதற்கு பழகிவிட, அடுத்த நாள் சிவராத்திரி
அன்று குறைகள் இன்றி முழு திருப்தியுடன் விரதம் இருந்து, பூரண பலனையும் அடைய முடியும்.
*மற்றபடி சிவராத்திரியன்று :*
சிவராத்திரியன்று கோவிலில் இருக்கும்போது இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை (கோவில் மடப்பள்ளியில் தயார் செய்தது) சாப்பிடலாம். தரிசனத்திற்கு வரும் சேவார்த்திகள் சேவை நோக்கோடு தரும் பால், சுண்டல் முதலியவற்றை உட்கொள்வது அவரவர் விருப்பம்.
போகும்போது சிவாலயத்திற்கு வில்வ இலை மற்றும் இதர புஷ்பங்களை அவரவர் சக்திக்கேற்ப வாங்கி செல்லவேண்டும்.
தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது. அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுறது சிவ பெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால்
அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம். அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம்.
சிவபுராணம், கோளறு பதிகம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜப் பத்து, பரமசிவன் ஸ்தோத்திரங்களைப் படிக்கலாம். தமிழில் திருமறைகளையும் ஓதலாம். சிவராத்திரியன்று பஞ்சாட்ச மந்திரம் உச்சரிப்பதால் மற்ற நாள்களில் நூறு முறை பஞ்சாட்சரம் ஜெபித்த பலன் கிட்டும் என்கிறது சாஸ்திரம்.
அதே போல் தான் லிங்கபுராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், திருவாசகம் ஆகியவற்றைப் படித்தாலும் கேட்டாலும் பலன்கள் மற்ற நாள்களை விட அதிகமாகவே கிடைக்கும். சிவராத்திரி விரதத்தின் மகிமையை, சிவன் நந்திக்கு உபதேசித்தார்.
அதனைக் கேட்ட நந்தி அதை அனைத்துத் தேவர்களுக்கும் கூறினார். அந்தத் தேவர்கள் அனைத்து முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் அதனைக் கூறினார். சிவராத்திரி தினத்தன்று மன சுத்தியோட `ஓம் நமச் சிவாய’ அல்லது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்று உச்சரித்துக்கொண்டு இருந்தாலே போதும் எல்லா பலன்களும் கிடைக்கும்.
ஐயா!வேதத்தை ஏற்காத யாவரும் நாத்திகர் என்கிறீர்களே,வேதநெறி சிவநெறி ஆகுமா? வேதநெறி தழைத்தோங்க,மிகுசைவத்துறை விளங்க...என்கையில் இரண்டும் வேறுபடவில்லையா? பக்தி இயக்க காலத்தில் வேதியரும் வேள்விநெறி இயலாமையால் சைவ வைணவர் ஆனார்கள்! சிவசிவ!
பதிலளிநீக்கு