முகவுரை

இறைவனே நமக்கு அருள்புரிந்த சமயம் சைவ சமயம். சைவ சமயம் அநாதியானது. சைவ சமயம் உலகெங்கும் பரவி இருந்தது. இறைவன் ஒருவனே என்ற தெளிவான கோட்பாடுகளை உரக்க எடுத்துக் கூறியது சைவ சமயம். (அனைத்து இந்து சமயங்களும்). முழுமுதற் கடவுளான சிவபெருமான் இந்த பூமியும் பேரண்டமும் என்று உண்டோ, அன்றிலிருந்து பெருங்கருணை கொண்டு உயிர்களுக்குத் தன் அருளைப் பொழிந்து வருகிறார். சைவ சமய தத்துவங்களும் கடவுள் கொள்களைகளும் மிகவும் நுட்பமானவையும் மிக உயர்ந்தவையும் ஆகும். இது இறைவனின் தன்மைகளை தெளிவாகக் காட்டுவதாக அமைகிறது. ஆகையால் தான், இவ்வுலகில் பல்லாயிரம் சமயங்கள் தோன்றினாலும், அச் சமயங்களில் உண்மை இல்லாமையினால் அவை மறைந்து அழிந்து போயின. இன்று உலகமயமாக்கல் காரணமாக, உலகின் இரு சமயங்களான கிறிஸ்தவமும் இசுலாமும் வெறும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டு, அரசியல் மத அரசியல் காரணங்களுக்காக, பாரத கண்டத்திலும் பரப்பப்பட்டு வருகிறது. இவைகளுக்கு கடவுள் என்று எந்த தத்துவமும், கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தாந்தமும் கிடையாது. ஆனால், அந்த பரம்பொருளான சிவபெருமானே நமக்கு அருள் செய்து, சமய உண்மைகளை அநாதி காலத்திருந்தே நமக்கு நேரடியாகவே உணர்த்தியிருப்பதால் சைவ சமயம் அநாதியான காலத்திருந்தே இருக்கிறது. சிவபெருமானின் திருவருளினால், அவன் அருளைப் பெற்ற மனிதர்கள் மட்டுமே சைவ சமயத்தை அறிய முடியும். அதைப் பின்பற்றவும் முடியும். மற்றவர்களால் நெருங்கக்கூட முடியாது. சைவ சமயிகளுக்கு இப்பிறப்பு முழுவதும் பேரின்பமும், இறுதியில் திருவடிப்பேறும் கிட்டும். சைவ சமய தத்துவங்களை வேதங்களும், ஆகமங்களும், பன்னிரு திருமுறைகளும் 14 சாத்திர நூல்களும், பதினென் சித்தர்களும் விளக்குகிறார்கள். இவை அனைத்தும் படிக்க படிக்க சிவானுபவ இன்பம் தந்து நம்மை சிவபெருமானுக்கு அருகில் இட்டுச் செல்பவை. இவையெல்லாம் படிக்க ஒரு பிறவி போதாது. இருப்பினும் அவனருளால், சிவஞானம் கிட்டி அதுவும் கைகூடும். நாம் முயற்சி செய்வோம். திருச்சிற்றம்பலம். மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

சனி, 13 ஆகஸ்ட், 2016

சமீபமாக உருவாக்கப்பட்ட சைவ சமய படங்கள்.

உலகின் சமயங்கள் எவை ? அதை தோன்றிய காலம் என்ன ? சைவ சமயத்தின் தொன்மை.




சிவபெருமானுக்குரிய ஐந்து தொழில்கள் யாவை ? அவை செய்வதற்குரிய கருவிகள் யாவை


இறைவனுடைய எட்டு குணங்கள் யாவை ? சைவ சமயம் இறைவனின் குணங்களாக எண்குணத்தான் என குறிப்பவை யாவை ?

 இந்துக்கள் கல்லைக் கும்பிடுகிறார்கள் என்று அறியாத நம் மக்களும், வேண்டுமென்றே புறசமயத்தவர்களும் கூறுவர். சைவர்கள் கல்லையா கடவுள் என்று கும்பிடுகிறார்கள்  

இறைவனை நேரடியாக வழிபடலாமா ? குருவை துணைக்கு வைத்துக் கொள்ளலாமா ?



வீட்டில் விளக்கேற்றும் போது பாட வேண்டிய பதிகம் இல்லக விளக்கது இருள் கெடுப்பது - திருநாவுக்கரசர் தேவாரம்.


 இறைவன் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லையா ? எங்கும் இருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லையா ? அவன் வருவதற்காக காத்திருக்கவா ?


சமயகல்வி நாம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. நம் முன்னோர்கள் நமக்களித்த அடிப்படை உண்மைகளை அறிந்து நம் குழந்தைகளுக்கும் சொல்வது நம் தலையாய கடமை.


 திருநீறு பூசுவதன் தத்துவம் என்ன ?


இறைவன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான் ? ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்கும் தன்மை அவனன்றி யாரால் முடியும் ? நம்மால் இதை உணரத்தான் முடியும். உணர்வதற்கே எண்ணற்றவர் தடுமாறித் தவிக்கின்றனர்.

 நம் முன்னோர்கள் நமக்களித்த சமய செல்வத்தை கொஞ்சம் கூட புரியாமல், புரிய முயற்சி செய்யாமல்,  முப்பத்து முக்கோடி தேவர்களை இந்துக்கள் கும்பிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள்.  கும்பிடுதல் அல்லது வணங்குதல் என்பதற்கு அர்த்தம் என்ன ?


வெளிநாட்டு தீய சக்திகள் உள்நாட்டு எட்டப்பன்களை வைத்து பெரும்பான்மையாக இருக்கும் நம்முடைய சமயத்தை நமக்கே தெரியாமல் அழித்து வருகின்றனர். நம் பாட புத்தகங்களில் இருந்து பல்வேறு சமய தத்துவங்களை கொஞ்சம் கொஞ்சமாக நீக்கிவிட்டனர். விளைவு ? நம் சமயத்தை நாமே கேலி கிண்டல் செய்யும் கேவலமான நிலை. இதற்கெல்லாம் ஒரே முடிவு, நாம் யாவரும் சமய அடிப்படைகள் அறிய வேண்டும். அதற்கு சைவ பாட சாலைகள் உலகில் தெருக்கள் எங்கும் அமைக்கப்பட வேண்டும்.


 பிறந்து தினமும் மலமிருந்து செத்துப்போன மனித பிணங்களை தேவன் என்று எண்ணி, அதை புண்ணிய பாரதம் முழுவதும் பரப்பும் மூடர் கூட்டம் உள்ளது. இவர்கள் என்று உண்மையைத் தெளிவார்கள் ?


பிறப்பிலி இறப்பிலி பிஞ்ஞகனைத் தொழுவோம் - திருமூலர்



உண்மையான இறைவனை அடையாளம் காண முடியாமல் அவரை நழுவும் பாவிகளுக்கு திருமூலர் கொடுக்கும் சாட்டையடி.



பிறப்பு இறப்பு இல்லாத ஏக இறைவனை அடையாளம் காணுங்கள். அவனை மட்டும் தொழுங்கள்  - மணிவாசகர்.


எல்லோரும் உருத்திராட்சம் (ருத்ராட்சம், உருத்திராக்கம்) அணியலாமா  ?


சிவசிவ என்று சொல்வது திருவருளால் மட்டுமே முடியும்.


எல்லோராலும் சிவசிவ என்று சொல்ல முடியுமா ? சிவசிவ என்று சொன்னால் என்ன கிடைக்கும் ?


தமிழர்களே தமிழர்களே என்னை கடலில் கட்டி தூக்கி போட்டாலும் நான் கட்டுமரமாய் மிதப்பேன். இது எங்கிருந்து திருடியது ? இந்த பதிகம் பாட பாட அனைத்து தீவினைகளும் உங்களை விட்டு ஓடிப்போய்விடும்.


இன்றைக்கு நம் கையில் இருக்கும் அளப்பரிய சிவஞானம் நமக்கு கிடைத்த வழி யாது ? திருக்கயிலாய பரம்பரை.


திருநாவுக்கரசர்:

கோவில் இல்லாத ஊர் காடு. திருநீறு அணியாத ஊர் காடு. பக்தி மிகுதியால் பாடாத ஊர் காடு. பல கோவில்கள் இல்லாத ஊர் காடு. சங்கநாதம் சங்கு ஊதாத ஊர் காடு. கோவில் மண்டபமும் நந்திக் கொடியும் இல்லாத ஊர் காடு. புத்தம் புதிய மலரை பறித்து இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு பின்னர் உணவு உண்ணாத ஊர் காடு.


சாவதற்கே பிறப்பவர் எவர் ?  ஐந்தெழுத்தை ஓதாதவரும், நடராச பெருமானின் பெருமைகளை பேசாதவரும், கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி நன்றி சொல்லாதவரும், புதிய மலர்களை பறித்து சுவாமிக்கு அர்ப்பணித்து விட்டு பின்னர் உணவு உண்ணாதவரும், நோய்கள் யாவும் தீர திருநீறு அணியாதவரும் ஆவர்.




2 கருத்துகள்: