அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
அன்பு தான் சிவம் என்பது எளிதில் புலப்படுவதன்று. அதை தீர ஆராய்ந்து அறிந்தால் தான் புலப்படும்.
சிறுவயதிலிருந்தே இறைவன் மேல் அன்பு செலுத்தி வந்திருந்தேன். அவன் பாடல்களையும் அவன் நாமத்தை சொல்லியும் அவன் பால் கொண்டிருந்த அன்பு பெருகிக் கொண்டே சென்றது. மடை திறந்த காட்டாற்று வெள்ளம் அடித்து புரண்டு வரும் என்பார்களே.. அதைப்போல் அந்த அன்பும் பெருகி வருவதை உணர்ந்து என் உள்ளமும் உடலும் நடுநடுங்கியது. அந்த வெள்ளத்தில் நீந்தி இது எங்கு சென்று முடிகிறது என்று பார்ப்போம் என்று தொடர்ந்து நீந்தி சென்றதில், அது முடியும் இடத்தில் இறைவன் எனக்கு காட்சி கொடுத்தான். அவனைக் கண்டவுடன் பல புதிர்களுக்கு விடை கிடைத்தது போல் இருந்தது. இதைத்தான் ஞானம் என்றும் கூறுகிறார்கள் என்று அறியாலனேன். இதை வெறுமனே படித்து அறிவதை விட்டு, தலையில் ஏற்றி, விடாது முயற்சி செய்து இறைவனைக் காணுங்கள். அதை அனுபவியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக